search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது அனாஸ்"

    ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு 4X400 மீட்டர் ரிலேயில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவுடன் 8 அணிகள் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றில் இடம்பிடித்தன.

    இதில் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜிவ் ஆரோக்கியா, பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் 3 நிமிடம் 11.89 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. கஜகஸ்தான் 3 நிமிடம் 19.52 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.
    400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், இந்திய வீரர் முகமது அனாஸ் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது தடகள போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. இன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றன. இதில் இந்தியாவின் ஹிமா தாஸ், நிர்மலா உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 50.79 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றா். கஜகஸ்தான் வீராங்கனை எலினா மிகினா 52.63 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.



    ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் முகமது அனாஸ் 45.69 வினாடிகள் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தார் வீரர் அப்டலேகா ஹசன் 44.89 வினாடிகளில் கடந்த தங்கப்பதக்கம் வென்றார். பஹ்ரைன் வீரர் அலி காமிஸ் 45.70 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    ×